நமது உடலில் எப்பொழுது நோய் எதிப்பு சக்தி குறைகிறதோ அப்பொழுது உடலில் சில மாற்றம் ஏற்படுகிறது  அதில் ஓன்று தான் காய்ச்சல் மற்றும் பலநோய்கள். 

     மனித உடலை அதிகமாக பாதிக்க கூடிய பாக்ட்டீரிய மற்றும் வைரஸ்களை கொன்று நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில ஆயுர்வேத மருந்து உள்ளது அதில் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

சீந்தில் பொடி 

                                       சீந்தில் பொடி இது தாவரவகையை சார்ந்தது இது பிற மரத்தின் துணையோடு வளரும் தன்மையை கொண்டது. பார்ப்பதற்கு வெற்றிலை அமைப்பை கொண்டிருக்கும். இதை தமிழில் மரணத்தை வெல்லும் அமிர்தம் என்ற பெயரும் உண்டு .

மேனிஸ்பேர்மசாஏ என்ற தாவரவியல் குடும்பத்தை சார்ந்தது. இதற்க்கு பல பெயரும் உண்டு அதில்  அமிர்தவல்லி, சோமவல்லி , அமிர்தைகுண்டலி மற்றும் அமிர்தகொடி என்ற பெயரும் உண்டு  

     பயன்படுத்தும் முறை 

                                              தேவையான பொருள்கள் :    சீந்தில் பொடி இரண்டு தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு தண்ணீர்   சேர்ந்து நன்றாக கொதிக்க வைக்கவும் பின்னர் அதை மிதமான சூட்டில்  அருந்தவும்.

   சிறியவர்கள் குறைந்த அளவு அருந்தவும் .

      பயன்கள் 

                           பசியின்மை , வயிற்று போக்கு , வெள்ளை படுதல், காய்ச்சல், விஷக்கடிகள் ஆகியவன்றை குணமாக்கக்கூடிய மருந்தாகும். 

அஸ்வகந்தா

                      அஸ்வகந்தா இது பூக்கும் தாவரவகையை சார்ந்தது , இதற்க்கு அமுக்கிரா மற்றும் அஷுவகந்தி, இருளிச்செவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது கத்தரி வடிவத்தை சேர்ந்தது. tracheobionta என்ற தாவரவியல் பெயரை கொண்டது. இது ஆங்கில மருந்தை காட்டிலும் நல்ல பலனைத்தரும்.
            

 பயன்படுத்தும் முறை 

                                         அஸ்வகந்தா இது பொடியாக அனைத்துவிதமான மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை தண்ணீர் அல்லது பால் ஆகியவற்றில் கலந்து அருந்தலாம். 
               
               

   பயன்கள் 

                           தூக்கமின்மை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நீரிழிவு நோய்யை குணப்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூறிக்கிறார்கள். தைராய்டு மற்றும் ரத்தஅழுத்தத்தையும்   மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. 

   மஞ்சள்

                   நமது அன்றாட  வாழ்வில் பயன்படுத்தும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பான் அது தான் மஞ்சள் இது இஞ்சி குடுப்பத்தை சேர்ந்தது. குர்க்குமின் என்ற வேதிப்பொருளை கொண்டது. மஞ்சள் கிழக்கை உடைத்தால் உலோக நாதம் என்ற  ஒலி தன்மையை கொண்டிருக்கும். c.longa என்ற தாவர இனத்தை கொண்டுள்ளது. இது இந்தியர்களின் சடங்குகளில் புனிதப்பொருளாக அக்காலம் முதல் இக்காலம் வரை பயன்படுத்தபட்டுவருகிறது. மஞ்சள்கிழக்கு  முதலில் நிறத்திற்காக பயன்படுத்தப்பட்டது அதன் பின் மருந்திற்காக பய்னபடுத்தப்பட்டது. 

 வகைகள்    

 • குடமஞ்சள் 
 • காட்டுமஞ்சள் 
 • பலாமஞ்சள் 
 • மரமஞ்சள் 
 • குரங்குமஞ்சள்
      

பயன்கள் 

 •   மஞ்சள் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்தப்படுகிறது.
 • சமையலில் நிறம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
 • உணவு கெட்டுப்போகாமல் பாதுகாக்க மஞ்சள் பயன்படுகிறது.
 • வயிறு சம்மத்தமான அனைத்துவகையான பிரச்சனையும் சரிசெய்ய மஞ்சள் பயன்படுகிறது.
 • இந்திய கலாச்சராக்களில் பெரிதாக பயன்படுகிறது.

கற்றாழை 

        கற்றாழை இது பூக்கும் தாவரவகையைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு ரோஜா இதழ்கள் போல் அமைப்பைக்கொண்டிருக்கும். லில்லியேசி தாவரவியல் குடும்பத்தை சார்ந்தது. இது ஆப்பிரிக்காவை பிறப்பிடமாக கொண்டது. பெரும்பாலான இனங்கள் தண்டுகள் இல்லாமல் காணப்படும். குமரி மற்றும் கன்னி கற்றாழை என பல பெயர்கள் பெற்றுள்ளது.
 

கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கர்களால் கற்றாழை உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

     வகைகள்  

 • சிறு கற்றாழை 
 •  பெரும்கற்றாழை
 •  பேய்க்கற்றாழை
 •  கருங்கற்றாழை  
 •  செங்கற்றாழை

     பயன்கள் 

 •  அழகுசாதன பொருள்களில் பயன்படுத்த படுகிறது. இதில் அலாய்ன் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால் இது உடம்பிற்கு நல்ல மருந்து பொருளாக பயன்படுகிறது. 
 • இதை தினமும் சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டை சமநிலைக்கு கொண்டுச்செல்கிறது.
 • இதைபயன்படுத்தி மின்சாதன(பேட்டரி)பொருள்களுக்கு வேதிப்பொருளாக பயன்படுகிறது.
 • குடல்புண், கருப்பை நோய் மற்றும் மூலநோய் , கண்நோய்,ஆகிய நோய்களை குணப்படுத்த கூடிய வல்லமை கொண்டது.

வேம்பிலை (வேம்பு )

           இது பூக்கும் தாவரவகையை சேர்ந்தது. இது அதிக மருத்துவ குணத்தை     சேர்ந்தது. இது தமிழ்நாட்டில் அதிகமாக வளரக்கூடியது. இந்தியாவை பூர்விகமாக கொண்டது. meliacaae என்ற தாவரவியல் குடுப்பத்தைச் சேர்ந்தது.

  வகைகள்  

 • நிலவேம்பு 
 • சர்க்கரைவேம்பு 
 • கருவேம்பு  
 • மலைவேம்பு  

 

   பயன்கள் 

 •  வேப்பிலையை தினமும் மென்று வந்தால் பல் ஈறுகள் வலுவடையும் மற்றும் துறுநாற்றம் ஏற்படாமல் தடுக்கும்.
 • வேம்பு சர்மாபிரச்சனைகள் அனைத்தையும் குணமாக்கும் சிறந்த பொருளாகும்.
 • குடல்புழு , கல்லிரல் , தொழுநோய் ,அம்மை நோய் , ஆகியவற்றை குணபடுத்தும் தன்மை கொண்டது.
 • வேப்பஎண்ணெய் கருத்தடைக்கு மிகவும் பயன்படுகிறது.
 • இந்திய கலாச்சராக்களில் முக்கியபங்கு வகிக்கிறது.
 • வேப்பஎண்ணெய் இயற்கைஎரிசக்தி எரிபொருளாக பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *